Template:Appeal/Brandon/ta
என்னுடைய இறப்பு செய்தியின் முதல் வரி போன்று நான் வாழ்வதாக உணர்கிறேன்.
விக்கிப்பீடியாவிற்கு வேலை செய்வதை போல என் வாழ்வில் வேறெதும் முக்கியமானது இல்லை என்று நான் நினைக்கிறேன். நாங்கள் ஒரு கலைக்களஞ்சியத்தை மட்டும் உருவாக்கவில்லை - மக்கள் சுதந்திரமாக இருக்கவும் உழைக்கிறோம். அறிவு இலவசமாக கிடைக்கும் இடத்தில் மக்கள் வாழ்வு மேம்படுகிறது. இந்த உலகம் நம்மை விட பெரியது என்று புரிந்துகொள்கிறோம்; ந்மது சகிப்புத் தன்மை மற்றும் புரிதல் கூடுகிறது.
உலகின் அதிகமாக பார்க்கப்படும் வலைத்தளங்களில் விக்கிப்பீடியா 5வது இடத்தில் இருக்கிறது. இந்த இடத்தில் அதை நிலைக்க வைத்திருக்கும், சிறிதெனும் லாபத்தை கூட எதிர்பார்க்காத நிறுவனத்தில் நான் பணி புரிகிறேன். இந்த வலைத்தளத்தில் விளம்பரங்களை வைப்பது எங்கள் சுதந்திரத்தை விட்டுக் கொடுப்பதற்கு சமானமானது என்று நாங்கள் கருதுவதால் அவற்றை வைப்பதில்லை. இந்த வலைத்தளம் என்றும் ஓர் பிரச்சார கருவியாக இருந்ததில்லை - இனி என்றும் அப்படி இருக்காது.
நமது வலைத்தளத்தில் படிப்பவர்கள் அளிக்கும் நன்கொடையில் தான் எங்களது வேலை நடக்கிறது. $5 அல்லது €10 அல்லது ¥1000 அல்லது தங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடை அளித்து விக்கிப்பீடியாவை காப்பீர்களா?
நான் விக்கிமீடியா நிறுவனத்தில் ஏன் வேலை செய்கிறேன் என்றால் அதுவே சரியான செயல் என்று என்னுடைய ஆன்மாவில் உள்ள அனைத்தும் கூறுகிறது. ஓர் சிறுவனை குழப்பி அவனிடம் பணம் பிடுங்குவதுற்கு ஏதுவாக செயலிகளை உருவாக்கும் மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் நான் வேலை செய்திருக்கிறேன். பணியிடத்திலிருந்து உடைந்து போய் வருவேன் வீட்டிற்கு.
உங்களுக்கு தெரிந்திருக்காது, ஆனால் விக்கிமீடியா நிறுவனம் மிக குறைந்த பணியாளர்களை கொண்டே இயங்குகிறது. முதல் பத்து இடத்தில் உள்ள மற்ற வலைத்தளங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கிறார்கள் மற்றும் கோடிகணக்கில் பணம் முதலீடு செய்யப்படுகிறது. அனால் நாங்கள் உருவாக்குவதில் ஓர் பங்கை கூட அவர்களால் செய்யமுடியவில்லை.
நீங்கள் விக்கிபீடியாவிற்கு நன்கொடை அளிப்பதன் மூலம் உலகெங்கும் இலவச அறிவு பரப்பபடுவதை ஆதரிக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கென ஓர் சிறந்த விசயத்தை விட்டுச் செல்வது மட்டுமல்லாமல், உலகெங்கும் இந்த அறிய புதையலை அடைய வழி செய்கிறீர்கள். மேலும் பலர் இவ்வாறு உதவுவார்கள் எனவும் நம்பிக்கை அளிக்கிறீர்கள்.
நன்றி,
பிரான்டன் ஹாரிஸ்
நிரல் ஒழுங்குச் செயலர், விக்கிமீடியா நிறுவனம்